கீச்சுகள் - 38



சாமி பார்க்க லேட்டாகும் எனசிறப்பு தரிசனம்எனும் பெயரில் கௌரவமாக காசு பிடுங்குவதற்குப் பெயரும் லஞ்சம் தான்!

*



எங்கிருந்தோ எம்மீது சொட்டும் இருசொட்டுப் பனித்துளிகள் பிரியத்துக்குரிய விழிகள் நனைத்ததாக இருக்கட்டுமே!

*

கடந்து போகும் கணத்தின் மீது உமிழ்ந்தேன், அது என் முகத்தில் தெறித்தது. முத்தமிட்டேன் அது என் இதழ்களில் பதிந்தது.


*

இந்தஅவதானிப்புங்கிற வார்த்தையில இருக்கிறஅவ(ள்)” யாருங்கிறத இதுவரைக்கும் ஒருத்தராச்சும் கண்டுபிடிச்சீங்ளா?

*

எல்லாச் சூழல்களிலும் அணியவியலாத, நம் குழந்தைகளைக்கூட எட்ட நிறுத்தி அணுகவைக்கும் ஆடைகளுக்குத்தான் பெரும்பாலும் அதிக விலை தருகிறோம்

*

சீட்நிரம்பாத என்ஜினியரிங் காலேஜ், ’வீட்டுமனைவிற்பனையாகாத ரியல் எஸ்டேட் கம்பெனி இடையே லோக்கல் டிவி விளம்பரங்களில் கடும் போட்டி!

*



போற்றும் மதத்தைவிட நம்பும் கடவுளை விட மெச்சும் தலைமையைவிட... வெயிலும், மழையும் மனிதனுக்கு எளிதாகப் பாடம் கற்பித்து விடுகிறது!

*

காமம் ஒரு செய்யுள் போலே
சிலர் புரிந்து ரசிக்கிறார்கள்
சிலர் மனப்பாடம் செய்கிறார்கள்!

*

லெமன் ஜூஸை ஸ்பூன்ல அள்ளிக் குடிக்குது ஒரு பாப்பா. ஏன்னு கேட்டா, அப்போதான் மெதுவா தீருமாம்! :)

*

அழுக்கு என்பது எல்லா இடங்களிலும் குறையான ஒன்றல்ல, சுத்தத்தின் விளைவாகவும் பாவிக்கப்பட வேண்டிய ஒன்று!

*

எங்க ஊருக்கு மேலே தப்பித்தவறி வர்ற மேகத்தையும், அக்கம் பக்கத்துல இருக்கிற யாரோ கொள்ளையடிச்சிடுறாங்கனு நினைக்கிறேன்.


*


புதிதாய்ச் சொல்ல வேறொன்றும் இல்லை வார்த்தைதான் ஆயுதம் வார்த்தைதான் மருந்து!

*

ஒன்றும் சிரமமில்லை சற்றே கை உயர்த்துங்கள் பக்கத்தில் வரும் மேகத்தை பற்றியிழுத்து பரிசளித்து விடலாம்.

*

மரத்தை வெட்டி வேர்கள் வரைத் தோண்டிய வெறுமை நிரம்பிய இடத்தைப் பார்க்கையில் இடுகாடு ஒன்று மனதில் நிரம்பத் தொடங்குகிறது!

*

கோழிகளுக்குலாபநட்டகணக்கு தெரிவதில்லை, அதனாலோ என்னவோ அவை ஒருபோதும் அழுகிய முட்டைகளை இடுவதில்லை.

*

மௌனம் சேகரித்தல் இனிது
சேகரித்ததை சிதறடித்தல் அதனினும்...

*

எல்லோரும் நன்றாக அறிவார்கள், அவர்கள் பார்க்க / வாசிக்க / எழுத விரும்பாத சில பக்கங்களும் அவர்களின் வாழ்க்கைப் புத்தகத்தில் உண்டென!

*

ஒற்றைச் சொட்டில் நிரம்புதலும்
பெருமழையில் காய்தலும்
காதலின் விதி.

*

சில மௌனங்கள் மிகவும் வலிமையானது.... அதைக் கேடயமாகப் பிரயோகிக்கிறவனுக்குதான் அதன் முழு வலிமை தெரியும்!

*

காமராஜர் குறித்து எது படித்தாலும் ஒரு கணம் மனசு குளிர்கிறது, கனக்கிறது, நெகிழ்கிறது, தளும்புகிறது. உச்சமாய் கண்களில் கூடுதல் ஈரம் படிகிறது

*

சார்ஜரை போன்ல கனெக்ட் பண்ணினா மட்டும் சார்ஜ் ஆகாது. சார்ஜரை ப்ளக்ல போட்டிருக்கனும், அப்புறம் ஸ்விட்ச் போட்டிருக்கனும் #மிடில_கண்டுபிடிப்பு

*

வளர்த்த கெடா மார்ல பாயுதுனு சொல்ற ஆடு மேய்ப்பர்களிடம் கேட்க விரும்பும் கேள்விவெட்டுறதுக்குத்தானே நீங்களும் நீவிநீவி வளர்த்துறீங்க

*

கவலைகளற்ற ஒரு மனிதனைச் சந்தித்து விடமுடியவில்லை என்பதும் நம் கவலைகளில் ஒன்றாய் இருக்கின்றது # ஆமாம்..சிலது தேவையில்லாத ஆணிதான் :)

*

நீங்கள் நாத்திகராகவே இருந்தாக்கூட IRCTCயில் தட்கால் போடும்போது உங்களையுமறியாமல்கடவுளே டிக்கெட் கிடைச்சுடனும்னு நினைச்சுடுவீங்க!

*

ஒன்றைஅவரவர் போக்கில், அவரவர் புரிந்துகொள்ளஅனுமதிப்பதைத்தான் ஆகக்கடும் தோல்வியாக மனம் நினைக்கிறது!

*

முதல் லவ் யூசொன்ன சூழலை நினைவு வைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் கடைசி லவ் யூசொல்லப்போகும் சூழல் தெரியாததுதான் காதலின் விந்தை!

*

குருவாக தங்களைக் கற்பனை செய்துகொள்பவர்களுக்கான முதல்ச் சிக்கல், அவரின் சிஷ்யர்கள் எனப்படுபவர்கள்சிஷ்யன்என ஒருபோதும் உணராததுதான்!

*

நிகழ்வுகளை இன்னும் சற்றே பொறுமையாக எதிர்கொள்ள வேண்டியதுதான் அவசரத் தேவையாக இருக்கின்றது.

*



பகிர்கையில் அன்பு பனித்துளியளவுதான்
உணர்கையில் மட்டும் வெடிகுண்டாய்!
*

குழந்தைகளின் முத்தத்திற்கு விலை நிர்ணயிக்க, இன்னும் காசு அச்சடிக்கப்படவில்லை!

*
அணைகட்ட, வாய்க்கால் வெட்ட துப்புக்கெட்ட அரசு, எவரோ வெட்டிய வாய்க்காலுக்கு கான்கிரீட் சமாதி அமைக்கிறது. விவசாயிகளை வேரறுக்க இது போதுமே :(

*

நீங்கள் புன்னகையைச் சிதறவிடுங்கள் தேவையுணர்ந்தோர் ஏந்திக்கொள்வர் :)

*

பல இடங்களில் இசை பாடல் வரிகளையும், சில இடங்களில் பாட்ல் வரிகள் இசையையும் கருணையின்றி கொலை செய்துவிடுகின்றன!

*

நாம் மீறுகையில் தவிர்க்க முடியாததாகவும், மற்றவர்கள் மீறுகையில் தண்டனைக்குரியதாகவும் தெரிகின்றவைகள்தான் விதிகள், சட்டங்கள்!

*

பிளாஸ்டிக்தழுவாத, உரசாத தண்ணீரைக் குடிக்கும் வாய்ப்பற்ற நிலையில் வாழ்கிறோம்! :(

*

2Hrs லேட்டாகும்னு கூடச்சொல்லுங்க, 120 நிமிசம் வெயிட் பண்ணித் தொலைக்கிறோம். ஆனா மூனே நிமிசத்துல வந்துடுறேனு முக்கா மணி நேரம் படுத்தாதீங்க!

*

தெரியாதுகள் எனப்படுபவை....
சில சமயம் சிறைக்கம்பிகள்,
பல சமயம் சிறகுகள்!

*
 
காலையில் எழுந்திருப்பற்கு மனதில்அலாரம்அடிக்கிறதோ இல்லையோ, 11 மணியாச்சுன்னா டீ-க்கு மட்டும்அலாரம்கூட இல்லைசங்கேமுழங்குகிறது.

· 

எல்லாவற்றையும் சந்தேகிப்பவன் இறுதியாய் ஒரு நாள் சந்தேகத்தையும் சந்தேகிப்பான்!

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - கீச்சுகள் அனைத்துமே அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கோமதி அரசு said...

போற்றும் மதத்தைவிட நம்பும் கடவுளை விட மெச்சும் தலைமையைவிட... வெயிலும், மழையும் மனிதனுக்கு எளிதாகப் பாடம் கற்பித்து விடுகிறது!//

உண்மை.