நன்றி! நன்றி!! நன்றி!!!


என்றோ மனதில் தோன்றிய ஒரு சிறு கனவு
இன்று மிகப் பிரமாண்டமாய் நிகழ்ந்தேறியது...

மிகுந்த நெகிழ்ச்சியோடு, மனதில் பொங்கும் நன்றியோடு, நீண்ட நாள் கனவு கண்ட பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம் வெற்றிகரமாய்.

சுமார் அறுபது பதிவர்கள், பத்து வாசகர்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட நண்பர்களோடு மாலை மிகச்சரியாக நான்கு மணிக்கு மிகச்சுவையான, சூடான தேநீரோடு ஆரம்பித்த சங்கமம் துல்லியமாக ஏழு மணிக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு நிறைவடைந்தது.

இனிய நண்பர் ஆரூரன் தலைமை தாங்க, புலவர் முனைவர். இராசு மற்றும் தமிழ்மணம் காசி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள...

பதிவர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசு ஆகியோர் தனிப்பட்ட தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள...

பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” துவக்கி வைக்கப்பட...

பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோரால் மிகச் சிறப்பாக கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட...

மிகச்சரியாக கூட்டம் ஏழு மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

சங்மத்திற்கான அனைத்து செலவுகளையும் ஈரோடு சார் பதிவுலக நண்பர்கள் ஆரூரன், சண்முகராஜன் , ஈரோடு கதிர், கார்த்திக், நந்து, லவ்டேல்மேடி, தங்கமணி, அப்பன், தாமோதர் சந்துரு, க.பாலாசி, பட்டிக்காட்டான், அகல்விளக்கு, பீம்பாய், இரா.வசந்த்குமார், கோடீஸ்வரன், வால்பையன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

தொடர்ந்து மூன்று மணி நேரம், அனைவரையும் அரங்கினுள் அமர்த்தி, மிக நேர்த்தியாக நடத்திய ஆரூரன் அவர்களே சங்மத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக பதிவர்கள் பாலாசி, அகல்விளக்கு, கோடீசுவரன் மற்றும் வாசகர்கள் ஜாபர், பைஜு செய்த பணிகள் மறக்க முடியாதவை.

மூத்த பதிவர்களான கார்த்திக், நந்து மிக ஆதரவாக, இணக்கமாக குறிப்பாக மிகுந்த மனோதைரியத்தை அளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியை வெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ் ஆகியோருக்கு நன்றிகள்.


கடந்த பல நாட்களாக அமெரிக்காவில் இருந்து என்னைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வழிநடத்திய கொங்கு வாசல் நா. கணேசன் அவர்களுக்கு நன்றி.

இருக்கும் திசைதோறும் தென்றலாய் வீசிய பதிர்வர்களின் வருகை இந்த சங்மத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை...

அந்த மகிழ்ச்சியை வெறும் நன்றி என்ற மூன்று எழுத்தால் என்னால் நிரப்பமுடியவில்லை....

ஒவ்வொருவர் கைபற்றிய போதும், புன்னகைத்த போதும், தோள் அணைத்த போதும் என் உடன் பிறந்த சொந்தமாகவே நினைத்து மனம் நெகிழ்கிறேன்...


இந்த சங்கமம் வெற்றிகரமாக நடந்ததாக யார் கருதினாலும் அதற்கு இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும் பங்கு உண்டு.

சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம் என்று கூறி வரும்காலத்தில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன்.


சில நயம்மிகு நிழற்படங்களைக் காண இந்தச் சுட்டியை அழுத்துங்கள்

சங்கமம் குறித்த மேலதிக தகவல்களுக்கு....
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
__________________________________________

68 comments:

பழமைபேசி said...

உங்களையும் உங்கள் குழுமத்தையும் பாராட்டுகிறோம்... வாழ்க, வெல்க!

பூங்குன்றன்.வே said...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடந்தது குறித்து மனம் மகிழ்கிறேன். உங்களுக்கும், குழுவிற்கும் வாழ்த்துக்கள் !!!

Chitra said...

ஒவ்வொருவர் கைபற்றிய போதும், புன்னகைத்த போதும், தோள் அணைத்த போதும் எ..............ன் உடன் பிறந்த சொந்தமாகவே நினைத்து மனம் நெகிழ்கிறேன்...........எல்லாவற்றையும் சிறப்பாக நடத்திய அனைவருக்கும் .பாராட்டுக்கள்.

Romeoboy said...

சங்கமம் நன்றாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இதே போன்று பல பதிவர் , வாசகர் சந்திப்பு நடத்த வாழ்த்துக்கள் தலைவரே ..

இராகவன் நைஜிரியா said...

வெற்றிகரமாக நடத்தியதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் வாழ்த்துகள் பல.

சீமான்கனி said...

புதியதொரு தொடக்கம்....
இனிதே யாவரும் இணைந்தே இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்...

கலகலப்ரியா said...

பாராட்டுகள் கதிர்...! :)... சந்தோஷமா இருக்கு..!

துபாய் ராஜா said...

மகிழ்ச்சி.நெகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

-/சுடலை மாடன்/- said...

அருமையாக ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். ஈரோடு பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

புதுவை வலைப்பதிவர் சிறகம் போல அடுத்து வரும் ஆண்டில் வலைப்பதிவுப் பயிலரங்கங்கம் ஒன்றையும் ஏற்பாடு செய்யுங்கள். புதிதாக பலர் வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமையான முறையில் சங்கமத்தினை நடத்திய - விழா வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

துவங்கப்பட்ட குழுமம் பல நல்ல செயல்களைச் செய்ய திட்டமிடுங்கள்

நல்வாழ்த்துகள்

vasu balaji said...

மிக மிக அருமையான ஒரு சந்திப்புக்கும், கருத்துப் பரிமாற்றத்துக்கும் விருந்தோம்பலுக்கும் உங்கள் குழுமத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அருமை. மேன்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!

ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் நாம் அனைவரும் பெறுவோம்.

நல்லதொரு துவக்கம்.

தாராபுரத்தான் said...

ஆரூரன் அவர்களே சங்மத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Unknown said...

மிகச் சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தீர்கள். பாராட்டுக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லபடியாக நடந்த சந்திப்பு கூட்டத்திற்கு மகிழ்ச்சியும் பாராட்டுகளும்

புலவன் புலிகேசி said...

நல்ல முயற்சி வெற்றியடைந்துள்ளது..வாழ்த்துக்கள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

பழமைபெசியின் பக்கங்களில் ஐம்பது படங்களைப் பார்த்து விட்டு
நல்ல முறையில் பதிவர் சந்திப்பை நடத்தி முடித்திருக்கும் செய்தியை, ஒவ்வொருவருடைய பார்வையில் இருந்தும் இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்!

வாழ்த்துக்கள்!

நாடோடி இலக்கியன் said...

மிக்க மகிழ்ச்சி கதிர்.

நிகழ்காலத்தில்... said...

கதிர் தங்களின் செயல்பாடுகளும் சிறப்பாகவே இருந்தது..

வாழ்த்துகள் அனைவருக்கும்..

kavithaigal said...

கதிர் அவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் என்னை நெகிழ செய்து விட்டன . எந்த ஒரு குறையும் நிகழ வில்லை . நிறைவை முடிந்தது . உங்களது உபசரிப்பில் மகிழ்ந்து வந்தோம் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உங்களையும் உங்கள் குழுமத்தையும் பாராட்டுகிறோம்... வாழ்க, வெல்க!
//

repeateyy

ராமலக்ஷ்மி said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் கதிர்!
சங்கமத்தைச் சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்! :-)

தேவன் மாயம் said...

அடேங்கப்பா!! வியப்புத்தான் ஏற்படுகிறது!!!

☀நான் ஆதவன்☀ said...

மகிழ்ச்சியாய் இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள் :)

மணிஜி said...

கதிர் உண்மையில் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. கலக்கி விட்டீர்கள்

CS. Mohan Kumar said...

மிக நெகிழ்வான மன நிலையில் எழுதி உள்ளீர்கள். விழா மிக இனிமையாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. சென்னையிலிருந்து நண்பர்கள் வருவது தெரியாது. தெரிந்தால் சேர்ந்திருப்பேன். இன்னோர் சந்தர்பத்தில் சந்திக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் கதிர்..!

முனைவர் இரா.குணசீலன் said...

குறை ஒன்றும் இல்லை நண்பரே..
எல்லாம் நிறைதான்..
ஈரோட்டில் இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்ததும் அதில் கலந்துகொண்டதும் ஏதோ கனவு போலவே இன்னும் உள்ளது..

வலைப்பதிவு என்பது ஒரு கனவு ஊடகம் போல இருந்த மனநிலை மாறி நாமெல்லாம் ஒரே வீட்டில் தான் இருக்கிறோம் என்கிற உணர்வு வந்தள்ளது..

நண்பர்கள் யாவரையும் கலந்துரையாடியதும்..


கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களும் மிகவும அழகாகவும் பயனுள்ளவாறும் அமைந்தன..

மிக்க மகிழ்ச்சி...

இந்த சந்திப்பு மனதில் அழியாத நினைவாகத் தங்கிவிட்டதால்..

சந்திப்பின் நினைவுத்துளிகள் சில எனது பதிவிலும் சிதறிக்கிடக்கின்றன.

☼ வெயிலான் said...

ஒரு முன்மாதிரியான நிகழ்வு நடத்திக் காட்டியிருக்கிறீர்கள். அருமை!

நன்றி கதிர்!

Paleo God said...

மிக்க மகிழ்ச்சி... நன்றாய் கிளைகள் பரப்பி தென்றலோடு நிழல் தரும் விருட்ச்சமாக வளர வாழ்த்துக்கள்::))

RAMYA said...

கதிர் அருமையாக ஒரு சந்திப்பை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்!

தோள் கொடுத்த தோழர்கள் ஆருரான் அவர்களுக்கும் எனது நன்றிகள்!

உங்களை கனவு பலித்ததுற்கு வாழ்த்துக்கள் கதிர் :-)

நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த உன்னத இடத்திற்கும் மிக்க நன்றி கதிர்!

இது போல் பல இடங்களிலும் நம் குழுக்கள் வெற்றிகரமாக அமைக்க எனது வாழ்த்துக்கள்!

விழாவிற்கு புலவர் முனைவர்.இராசு மற்றும் தமிழ்மணம் காசி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இவர்களுக்கு எனது பணிவான நன்றிகளை இங்கே பதிவு செய்கிறேன்.

மொத்தத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிளிச்சி அடைகிறேன்

ஒரு விழாவை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததிற்கு வாழ்த்துக்கள் கதிர்!

சிறப்பான விருந்திற்கு நன்றி கதிர்!

உங்களுக்கும் உங்கள் குழுமத்தினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!

மற்றவைகளை என் பதிவில் பதிவுடுகிறேன்!

பரிசல்காரன் said...

இன்னும் பிரமிப்பு அடங்காமலே இருக்கிறோம் கதிர். அபாரமான ஏற்பாடுகள். அதுவும் ‘நிறைவாய் செய்தது நண்பர் குழாம். ஏதும் குறையெனில் நான் மட்டுமே பொறுப்பு’ என்ற உங்கள் பாங்குக்கு நீங்கள் கும்பிட்டதைப் போலவே நாங்களும் கும்பிட்டு நன்றியுரைக்கிறோம்!

செ.சரவணக்குமார் said...

இப்பிடி ஒரு அற்புதமான நிகழ்வின் சந்தோஷமும், கலந்துகொள்ள‌ முடியாத வருத்தமும் சேர்ந்த கலவையான உணர்வு. ஈரோடு பதிவர்களின் ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு மகத்தானது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

சந்திப்பு நல்லபடி நடந்தது அறிந்து மகிழ்ச்சி. இணையத்தில் பதிவுகள்/ பதிவர்கள் ஒரு தனி சக்திவாய்ந்த துறையாக இடம்பெற்று வருகிறதென்பதே இதன் மூலம் அறியும் செய்தி.

sathishsangkavi.blogspot.com said...

ஒரு அழகான நிகழ்ச்சியை நடத்தை பதிவர் மனதில் ஆழமாய் இடம் பிடித்து இருக்கறீர்கள்........

வாழ்த்துக்கள்........வாழ்த்துக்கள்........வாழ்த்துக்கள்........

அகநாழிகை said...

வாழ்த்துகளும், நன்றியும் கதிர்.

- பொன்.வாசுதேவன்

butterfly Surya said...

கொங்கு நாட்டு உபசரிப்பு..வாவ்.. என்னத்த சொல்ல..??

கலக்கிட்டீங்க கதிர். இரவெல்லாம் நிகழ்ச்சி பற்றியே பேசி கொண்டு அளவில்லாத ஆனந்தந்தோடு சென்னை வந்து சேர்ந்தோம்.

”Simply Superb"

வாய்ப்பளித்த அனைத்து நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றி என்பது சிறிய வார்த்தை..

அன்புடன்

சூர்யா

ஈரோடு கதிர் said...

@@ பழமைபேசி

@@ பூங்குன்றன்.வே

@@ Chitra

@@ Romeoboy

@@ இராகவன் நைஜிரியா

@@ seemangani

@@ கலகலப்ரியா

@@ துபாய் ராஜா

@@ சுடலை மாடன்

@@ cheena (சீனா)

@@ வானம்பாடிகள்

@@ நட்புடன் ஜமால்

@@ அப்பன்

@@ தாமோதர் சந்துரு

@@ ஆ.ஞானசேகரன்

@@ புலவன் புலிகேசி

@@ கிருஷ்ணமூர்த்தி

@@ நாடோடி இலக்கியன்

@@ நிகழ்காலத்தில்

@@ vittalankavithaigal

@@ T.V.Radhakrishnan

@@ ராமலக்ஷ்மி

@@ சந்தனமுல்லை

@@ தேவன் மாயம்

@@ நான் ஆதவன்

@@ தண்டோரா

@@ Mohan Kumar

@@ உண்மைத் தமிழன்

@@ முனைவர்.இரா.குணசீலன்

@@ வெயிலான்

@@ பலா பட்டறை

@@ RAMYA

@@ பரிசல்காரன்

@@ செ.சரவணக்குமார்

@@ ஹுஸைனம்மா

@@ Sangkavi

@@ அகநாழிகை

@@ butterfly Surya

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

நர்சிம் said...

வாழ்த்துக்கள் தலைவா

மிக வருந்துகிறேன் வரமுடியாமல் போனதற்கு.

Unknown said...

பல பதிவுகளில் இன்று ஈரோடு சந்திப்பைக் குறித்த இடுகைகள். ஒரு நல்ல நிகழ்வை மிகச் சிறப்பாக வழி நடத்தி இருக்கிங்கன்னு புரிந்துகொள்ள முடியுது. வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

சந்திப்பு வெற்றிகரமாக நடந்துமுடிந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நண்பா.

வால்பையன் said...

என்னுடய நன்றிகளும்!

தமிழ் said...

வாழ்த்துகள்

SUMAZLA/சுமஜ்லா said...

மறக்க முடியாத இனியதொரு மாலைப் பொழுதைத் தந்தீர்கள் நண்பரே! எப்படிப் பாராட்டுவது உங்கள் குழுமத்தை?!

Jerry Eshananda said...

என்னை அன்பில் திக்குமுக்காட செய்த "கொங்கு நாட்டு தமிழ்சாதி சொந்தங்களே",நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

Sabarinathan Arthanari said...

வெளியூரில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. விரைவில் சந்திப்போம்.

வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

உங்களுக்கும் சிறப்பாக நடத்திய குழுவிற்கும் வாழ்த்துகள்

சென்ஷி said...

உங்களையும் உங்கள் குழுமத்தையும் பாராட்டுகிறோம்... வாழ்க, வெல்க!

ஈரோடு கதிர் said...

@@ நர்சிம்

@@ KVR

@@ S.A.நவாஸுதீன்

@@ வால்பையன்

@@ திகழ்

@@ SUMAZLA/சுமஜ்லா

@@ ஜெரி ஈசானந்தா

@@ Sabarinathan Arthanari

@@ நேசமித்ரன்

@@ சென்ஷி

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//குறை ஒன்றும் இல்லை நண்பரே..
எல்லாம் நிறைதான்..//

நானும் சொல்கிறேன்.எங்களை அழைத்தமைக்கும் இப்படி ஒரு தருணத்தில் உங்களுடன் இருக்க வாய்ப்புத் தந்தமைக்கும் மிக மிக நன்றி கதிர் சார்.

துபாய் ராஜா said...

வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

Kasi Arumugam said...

கதிர் உள்ளிட்ட அன்பு நண்பர்களே,

உண்மையிலேயே மறக்க முடியாத சந்திப்புத்தான் ஈரோட்டில் நேற்று நடந்தது. நீண்ட பதிவெழுத நேரம் வாய்க்கவில்லை இப்போது. உங்கள் அனைவரின் திட்டமிடல், நிர்வகிப்பு, பெரும்போக்கு, அன்பு, கூட்டுழைப்பு அத்தனையையும் பார்த்து வியக்கிறேன். ’ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோட வாழ்த்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

பிரம்மிக்க வைத்தீர்கள்.பெருமைப் படுத்தினீர்கள். இன்னும் தேடுகின்றேன் வார்த்தைகளை...
பாராட்ட.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்.. என் கருத்துகளை உங்களிடம் கூறிவிட்டேன். உங்கள் பணி சிறக்கட்டும்.

ரோஸ்விக் said...

நல்ல பதிவர் படை. தொடர்ந்து செயலாற்றுங்கள்.
தங்களின் சிறப்பான திட்டமிடலுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும்.

காமராஜ் said...

பல பிரயாண அனுபவங்கள் எட்டாக்கனியாகக் கிடந்த பால்யப்பருவம் போல கையில்கிடைத்த இந்த ஈர்ரோட்டுப் பயணம் பறிக்கப்பட்டுவிட்டது. நிறைய இழந்த வெறுமையை ஒவ்வொரு முறையும் வலை திறக்கும்போது உணர நேரும். இருந்தும் வாழ்த்துக்கள் கதிர். மாதுவின் சார்பிலும்.

அன்புடன் மலிக்கா said...

படிக்கும்போதே ந்நெரில் அத்தனையும் கண்முன்னே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,,
உங்களுக்கும் உங்கள் குழுமத்துக்கும் பாராட்டுக்கள்...

http://niroodai.blogspot.com

சிவாஜி said...

அருமையான அனுபவம்! நன்றி நன்றி நன்றி!

Anonymous said...

கதிர்,

மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு, திட்டமிட்டவாறே மிகச் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி என்ற பிரமிப்பிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை.

உங்கள் பதிவிலிருந்து ,

//
சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம்//

என்ற வரிகள் அப்பிரமிப்பை இன்னும் அதிகமாக்கியது.

அமர பாரதி said...

நிகழ்ச்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கதிர். அடுத்த முறை ஈரோடு வரும் போது தங்களை சந்திப்பேன்.

Sanjai Gandhi said...

//சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம் என்று கூறி வரும்காலத்தில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன். //

இதுக்கு அவசியமே இல்லை கதிர். அற்புதமாக நடத்தினீர்கள். ரொம்பவே சந்தோஷப் பட்டோம். உங்கள் பணி மிக சிறப்பானது. பாராட்டுகள்.

பெருசு said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

வாழ்க! வளர்க!

அன்புடன் நான் said...

வெற்றி விழாவின் சாதனைக்கு வாழ்த்துக்கள் கதிரண்ணா.

நினைவுகளுடன் -நிகே- said...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது குறித்து மனம் மகிழ்கிறேன். உங்களுக்கும், குழுவிற்கும் வாழ்த்துக்கள்

Thamira said...

இணைப்பிலிருந்த படங்களனைத்தையும் கண்டேன். மிகவும் பிரமிப்பாக இருந்தன.

தமிழ்ப்பதிவுலகின் மிக முக்கியமான நிகழ்வென உணரமுடிகிறது. இது தொடரவேண்டும். மிஸ் பண்ணிய வருத்தமும் இருக்கிறது.

வாழ்த்துகள் உங்களுக்கும், பின்னின்ற உங்கள் குழுவினருக்கும்.

J.P Josephine Baba said...

தமிழக வலைப் பதிவர்கள் என்று, என்று இணையுவோம்?

Unknown said...

அந்த கும்பிடு போட்டோ செம....